தமிழ்

உங்கள் பயன்பாட்டு கட்டணங்களை செலுத்துவதற்கு உதவி தேவையா?

COVID-19 பெருந்தொற்று காலத்தில், உங்களால் மின்சாரம், சமையல் எரிவாயு அல்லது தண்ணீர் பயன்பாட்டு கட்டணங்களை செலுத்த முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவி கிடைக்கும்.

உங்கள் பயன்பாட்டு நிறுவனத்தை அழைக்கவும். இந்த இரண்டு கேள்விகளை கேட்கவும்:

  • எந்தெந்த உதவி திட்டங்களுக்கு நீங்கள் தகுதி பெறுகிறீர்கள்?
  • கட்டணம் செலுத்த தவறிய தவணைகளுக்கு கட்டணம் செலுத்தும் முறையை அமைக்க முடியுமா?

மின்சாரம், சமையல் எரிவாயு அல்லது தண்ணீர் பயன்பாட்டு நிறுவனங்களைத் தொடர்புகொள்ள உதவி வேண்டுமா? வரைப்பட பக்கத்தில் உங்கள் முகவரியை உள்ளிடவும்: https://www.commerce.wa.gov/utility-assistance/.

மக்களுக்கு பயன்பாட்டு கட்டணங்களை செலுத்த உதவும் தேசிய திட்டத்திற்கு நீங்கள் தகுதி பெறலாம்.

உங்கள் வருமான அடிப்படையில், “LIHEAP” என்ற தேசிய திட்டத்திற்கு நீங்கள் தகுதி பெறலாம் (குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கான வீட்டு மின்சார பயன்பாட்டு உதவி திட்டம்). அதைப்போலவே, தண்ணீர் பயன்பாட்டு கட்டணத்திற்கும் ஒரு புதிய திட்டம் வடிவமைக்கப்படுகிறது. தகுதி பெறும் வருவாய் வரம்புகளுக்கான சில உதாரணங்கள்:

  • வீட்டில் வசிப்பவர் எண்ணிகை – 1 நபர் = மாத வருவாய் $1,595 -க்கும் குறைவு அல்லது ஆண்டு வருவாய் $19,140 -க்கும் குறைவு
  • வீட்டில் வசிப்பவர்கள் எண்ணிகை – 2 நபர்கள் = மாத வருவாய் $2,155 -க்கும் குறைவு அல்லது ஆண்டு வருவாய் $26,860 -க்கும் குறைவு
  • வீட்டில் வசிப்பவர்கள் எண்ணிகை – 4 நபர்கள் = மாத வருவாய் $3,275 -க்கும் குறைவு அல்லது ஆண்டு வருவாய் $39,300 -க்கும் குறைவு

தகவல்களுக்கு, 2-1-1 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும் அல்லது நீங்கள் வசிக்கும் பகுதியின் உள்ளூர் “சமுதாய செயல் முகமையை” அழைக்கவும். தொடர்புகொள்ளும் தகவல்களைப்பெற, இந்த வரைபடத்தை பயன்படுத்தவும்: https://fortress.wa.gov/com/liheappublic/Map.aspx

வேறு கட்டணங்களுடன் உதவ வளங்கள் இருக்கிறது. தகவல்களுக்கு, 2-1-1 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும்.

இந்தப் பெருந்தொற்று வாஷிங்டன் மாநிலத்தில் பலரின் எதிர்பாராத செலவிற்கு வழிவகுத்திருக்கிறது. நீங்கள் மட்டும் இப்படி இல்லை. வாடகை, உணவு, பிராட்பேண்ட் மற்றும் இதர கட்டணங்களை செலுத்தும் திட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு, யாரிடமாவது விசாரிக்க வேண்டும் என்றால், 2-1-1 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும்.

Last Updated 2021-06