COVID-19 வாடகை உதவித்தொகை கிடைக்கிறது
நீங்கள் வாடகை செலுத்தவேண்டிய கெடு முடிந்திருந்தால் அல்லது வெளியேற்றப்படும் அபாயம் இருந்தால் உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன.
- வாடகை உதவி. மாநிலம் முழுவதும் உள்ள உள்ளூர் நிறுவனங்கள் வாடகை உதவி வழங்குகின்றன. எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த தகவல்களுக்கு நீங்கள் அல்லது இட உரிமையாளர் உங்கள் மாவட்டத்திலுள்ள உள்ளூர் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம்.
வாடகை உதவி வழங்குநர்களின் பட்டியல்: https://www.commerce.wa.gov/serving-communities/homelessness/eviction-rent-assistance-program/
நீங்கள் 25 வயதுக்குக் கீழ் உள்ள குடியிருப்பாளர் எனில், உள்ளூர் இளையோர் மற்றும் இளம்வயதினர் வெளியேற்ற வாடகை உதவித் திட்டம் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும். பட்டியல்: https://www.commerce.wa.gov/serving-communities/homelessness/youth-and-young-adult-eviction-rent-assistance-program/
- வெளியேற்ற தீர்வுத் திட்டம். நீங்கள் வசிக்கும் மாவட்டத்திலுள்ள உள்ளூர் வழக்குத் தீர்வு மையத்தை நீங்களோ அல்லது உங்கள் இட உரிமையாளரோ தொடர்புகொள்ளலாம். வெளியேற்றப்படுதல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க இந்த மையங்கள் உதவமுடியும். பட்டியல்: org/locations
- ஆலோசனைக்கான உரிமை சட்டச் செயல்திட்டம். பொது உதவி பெறும் குடித்தனக்காரர்கள் அல்லது மிகக்குறைந்த வருவாய் உள்ளவர்கள் – ஒரு தனிநபருக்கு $25,760 அல்லது நான்குபேருள்ள குடும்பத்துக்கு $53,000 வருடாந்திர வருவாய் உள்ளவர்கள் – வெளியேற்ற நடைமுறைகளின்போது ஒரு வழக்கறிஞரை இலவசமாக பணியமர்த்திக் கொள்ளமுடியும். வெளியேற்றப் பாதுகாப்பு ஆய்வு எண் 855-657-8387-ஐத் தொடர்பு கொள்ளவும் அல்லது இணையவாயிலாக org/apply-online என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கவும்.
மாநில அரசு வழக்கறிஞரிடமிருந்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்
Office of the Attorney General (அரசு வழக்கறிஞர் அலுவலகம்) இந்தத் திட்டங்கள் மற்றும் பிற நில உரிமையாளர்-குடியிருப்பவர் பிரச்சினைகள் குறித்துக் கூடுதல் சட்ட மற்றும் கொள்கைசார் தகவல்களை வெவ்வேறு மொழிகளில் atg.wa.gov/landlord-tenant என்ற இணையப்பக்கத்தில் வழங்குகிறது.
மற்ற செலவினங்களில் உதவி குறித்த தகவல்களுக்கு 2-1-1 என்ற எண்ணை அழைக்கவும்
wa211.org -ஐப் பார்வையிடவும் அல்லது 2-1-1 என்ற எண்ணில் அழைப்பதன் மூலம் மின்சார கட்டணங்கள், உணவு, இணையத்தொடர்பு மற்றும் பலவற்றிற்கு பணம் செலுத்த மக்களுக்கு உதவுவது குறித்து தகவல் வழங்கும் ஒருவருடன் பேசவும்.
Last Updated 2021-10
- ኣማርኛ (AM)
- العربية (AR)
- Chuuk (CHK)
- Duetch (DE)
- Español (ES)
- فارسی (FA)
- Français (FR)
- हिन्दी (HI)
- Lus Hmoob (HM)
- 日本語 (JP)
- ကညီ ကျိာ် (KAR)
- ខ្មែរ (KM)
- 한국어 (KO)
- ພາສາລາວ (LAO)
- Kajin Majōl (MH)
- Tu’un Savi (MX)
- မြန်မာစာ (MY)
- नेपाली (NE)
- Afaan Oromoo (OM)
- ਪੰਜਾਬੀ (PA)
- Português (PT)
- Limba română (RO)
- русский язык (RU)
- Gagana Samoa (SM)
- Af-Soomaali (SO)
- Kiswahili (SW)
- தமிழ் (TA)
- తెలుగు (TE)
- ภาษาไทย (TH)
- ትግርኛ (TI)
- Tagalog (TL)
- українська мова (UK)
- ارُدُو (UR)
- Tiếng Việt (VI)
- 简体中文 (ZHS)
- 繁體中文 (ZHT)